சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை

சென்னை: இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 309வது பிறந்த நாளையொட்டி எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு நேற்று தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமார், பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல், யாதவ எழுச்சி பேரவை சாாபில் முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நிர்வாகிகள், காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு தமிழக தலைவர் நாசே.ராஜேஸ், கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் மோகன், கிருஷ்ணன், குணசேகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், சைதை ராஜேந்திரன் உள்பட பலர், தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள், யாதவ பேரவை  தலைவர் ஜி.கண்ணன், அகில இந்திய யாதவ சபை தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் மற்றும்  ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

Tags : Freedom fighter
× RELATED சுதந்திர போராட்ட வீரர் காலமானார்