சென்னை டைடல் பார்க்கில் 4.62 கோடி மதிப்பீட்டில்தொழில் முனைவோர் மையம்

சென்னை: சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்ட அறிவிப்புகள்:
* சிப்காட் தொழிற் பூங்காக்களில் உட்கட்டமைப்பு வசதிகள் 20 கோடியில் மேம்படுத்தப்படும்.
* சிறுசேரி, இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகம், வல்லம்-வடகால் சிப்காட் தொழிற் பூங்காக்களை இயற்கை எழில்மிகு பூங்காக்களாக மேம்படுத்த 20 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* சிப்காட் தொழில் பூங்காக்களில் 2 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் 9.65 கோடி திட்ட மதிப்பீட்டில் நடப்படும்.
* சிப்காட் நிறுவனத்துக்கான இணையவழி ஒருங்கிணைந்த மென்பொருள் சேவை 1.50 கோடியில் உருவாக்கப்படும்.
* சென்னை டைடல் பார்க்கில் 3 ஆயிரம் சதுர அடியில் 4.65 கோடியில் தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும்.

Tags : Industry Entrepreneurship Center , Chennai Tidal Park
× RELATED விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா நிலத்தில்...