சென்னையில் உள்ள கோயில் குளங்களை மத்திய அரசு குழுவினர் ஆய்வு

சென்னை: சென்னையில் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில்  முதல்கட்டமாக 104 நீர்நிலைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கோயில் குளங்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 114 நீர் நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்த நிலையில் மத்திய அரசு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 710 தாலுகாக்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்க முடிவு செய்து தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் சீரமைக்கப்பட்ட நீர் நிலைகளை நேற்று மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழு பார்வையிட்டது. ராயபுரம் கந்தகேட்ட முத்துகுமாரசாமி கோயில் குளம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம், பார்த்சாரதி கோயில் குளம், திருவட்டீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரவாயல் வி.ஜி.என் நகரில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலையும் அந்த குழு பார்வையிட்டது. இந்த மழைநீர் வடிகால் நேரடியாக நீரை குளத்தில் சேர்க்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதன்பிறகு சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில், நீர் நிலைகளை சீரமைப்பது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் செய்யபட்டுள்ள பணிகளை மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கினர். இனைத் தொடர்ந்து மத்திய சிறுபான்மை நல அமைச்சக இணை செயலாளர் நிவா சிங் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மத்திய குழு அமைச்சர் ராஜூவ் சிங்கல், சுப்ராட் குமார், அசோக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tags : Temple pools, central government team inspection
× RELATED ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய...