பொதுப்பணித்துறையில் பொறியாளர்கள் டிரான்ஸ்பர் சென்னை: பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் கட்டுமான பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர், நடு பெண்ணையாறு கோட்ட வடிநில செயற்பொறியாளர் முரளிதரன் சென்னை நீர்வளத்துறை வடிவமைப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர், மதுரை குண்டாறு கோட்ட வடிநில செயற்பொறியாளர் விஸ்வநாத் சென்னை நிலத்தடி நீர் கண்காணிப்பு பொறியாளர், மதுரை கட்டுமான மருத்துவபிரிவு செயற்பொறியாளர் புவனேஸ்வரன் மதுரை கட்டுமான, பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர், கோவை சுற்றுச்சூழல் பிரிவு கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார் அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் (அயல்பணி), நாகர்கோவில் கடல் அரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் கிறிஸ்துநேசகுமார் சென்னை ஸ்வர்மா திட்ட கண்காணிப்பு பொறியாளர், மதுரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராணி சென்னை கட்டுமான பிரிவு இணை தலைமை பொறியாளர், பாலாறு கோட்ட செயற்பொறியாளர் சாதனா சென்னை சுற்றுலாத்துறை திட்ட மேலாண்மை குழு கண்காணிப்பு பொறியாளர், சென்னை திட்ட உருவாக்க செயற்பொறியாளர் வில்வநாதன் பூண்டி நீர் ஆய்வு நிறுவன கண்காணிப்பு பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு சிறப்பு தலைமை பொறியாளர் கருணாநிதி மணல் குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரக கண்காணிப்பு பொறியாளர், சென்னை நீர்வளத்துறை வடிவமைப்பு கண்காணிப்பு பொறியாளர் சென்னை மண்டலம் திட்டம்,உருவாக்கம் இணை தலைமை பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Transfer Engineers, Public Works, Chennai, Public Works Secretary ,Prabhakar orders:
× RELATED முழு கொள்ளளவு வரும் வரை தண்ணீரை...