தந்தையால் உயிருக்கு ஆபத்து எஸ்சி வாலிபரை மணந்த பாஜ எம்எல்ஏ மகள் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு

அலகாபாத்: உபி.யின் பரேலி தொகுதி பாஜ எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா. உயர் பிரிவை சேர்ந்தவர். இவரது மகள் சாக்‌ஷி. இவர், அஜிதேஷ் என்ற தாழ்த்தப்பட்ட வாலிபரை காதலித்து ரகசியமாக மணம் முடித்தார். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் கடந்த வாரம் வெளியிட்டார்.     இந்த திருமணத்தில் ராஜேஷ் மிஸ்ராவுக்கு விருப்பம் இல்லை. இதனால், தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், தங்கள் உயிருக்கு தந்தை, சகோதரன் மற்றும் அவருடைய  நண்பர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மற்றொரு வீடியோவையும் சாக்‌ஷி வெளியிட்டுள்ளார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் அவர் மனு செய்துள்ளார்.

Advertising
Advertising

அதில், ‘எங்கள் உயிருக்கு தந்தை, சகோதரனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட எங்களை, அமைதியாக வாழ பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த மனு 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதே நேரம், ராஜேஷ் மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘எனது மகள் மேஜர் என்பதால், அவர் சொந்தமாக முடிவெடுக்க உரிமை உள்ளது. அவருக்கு நானோ, எனது குடும்பத்தினரோ எந்த மிரட்டலும் விடுக்கவில்லை,’’ என்றார்.

Related Stories: