ஓடும் பஸ்சில் திடீர் நெஞ்சுவலி 40 பயணிகளை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட டிரைவர், 40 பயணிகளையும் காப்பாற்றிவிட்டு உயிர் விட்டார்.திருவனந்தபுரம்  வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்  (55). கேரள அரசு போக்குவரத்து  கழகத்துக்கு உட்பட்ட நெடுமங்காடு டெப்போவில் டிரைவராக  பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் காலை கல்லராவில் இருந்து நெடுமங்காட்டுக்கு பஸ்சை  ஓட்டி சென்றார்.  பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். அதே பஸ்சில் ஒரு  தனியார்  நிறுவனத்தில் பணிபுரியும் அவரது மகள் ஜெயராணியும் பயணம் செய்தார்.

Advertising
Advertising

பஸ்  மூழிகொல்லை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது  ஜெயராஜுக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. தாங்க முடியாத வலி என்ற போதிலும், அதை  சமாளித்துக்கொண்டு பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பஸ் நின்ற அடுத்த நொடியே  அவர் ஸ்டியரிங்கிலேயே மயங்கி சரிந்தார். உடனடியாக பஸ்சில் இருந்த   மற்றொரு டிரைவர் பஸ்சை நெடுமங்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில்  ஜெயராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்.

Related Stories: