நியூஸ் பிரின்ட் வரியை வாபஸ் பெற வேண்டும்: மாநிலங்களவையில் கோரிக்கை

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கேரள சுயேச்சை எம்பி வீரேந்திர குமார் பேசியதாவது:    பட்ஜெட்டில், பத்திரிகைகளை அச்சடிக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நியூஸ் பிரின்ட் எனப்படும் காகிதம் மீது 10 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சுங்கவரியாகும். ஏற்கனவே, குறைந்த விளம்பர வருவாய், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக செய்தித்தாள் நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதனால், சிறு மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதுடன், பல நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளுப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவில் தயாராகும் தாளின் தரம் அதிவேகத்தில் அச்சிடப்படும் நவீன இயந்திரங்களில் பயன்படுத்த தகுதி இல்லாதவையாக உள்ளதுஎனவே, நியூஸ் பிரின்ட் மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத சுங்க வரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

Related Stories: