ரயில்வேயில் மனித கழிவை மனிதனே அள்ளுவது வெட்கக்கேடு: மக்களவையில் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: ரயில்வே துறையில் மனித கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் அவலம் தொடர்கிறது. தங்கள் ஊழியர்களை மனித கழிவை அள்ள வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் கூறிவிட்டு, அந்த பணியை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் செய்து வருகிறது. இந்த அவலம் இன்னும் நீடிப்பது வெட்கக் கேடானது. இந்த நிலையில், மத்திய அரசு புல்லட் ரயிலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அது நமக்கு கிடைத்தாலும் பலனில்லை என்றார்.மற்றொரு விவாதத்தில் கனிமொழி பேசுகையில், ‘‘மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தியில் உள்ளன. உதாரணத்துக்கு, தூத்துக்குடியில்  ‘பிரதமர் சதக் யோஜனா’ என்ற திட்டத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எப்படி கிராம மக்கள் புரிந்து கொள்வார்கள்’’ என்றார்.

Related Stories: