பெரும் கடன் சுமையைக் குறைக்க சொத்துக்களை விற்று 21,700 கோடி திரட்ட அனில் அம்பானி திட்டம்

புதுடெல்லி: பெரும் கடன் சுமையால் திண்டாடி வரும் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி, தனது சொத்துக்களை விற்று21,700 கோடி நிதி திரட்டி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இவற்றில் ரிலையன்ஸ் இன்ஸ்பராஸ்டெக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 9 சாலை திட்டங்களை விற்பதன் மூலம் ₹9,000 கோடியும், நிதி தொழிலில் முதலீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து 11,500 கோடியும் திரட்டவும் உத்தேசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடப்பதாக ரிலையன்ஸ் குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து  அனில் அம்பானி கூறுகையில்.  “ரிலையன்ஸ் குழுமம் தனது சொத்துகளை விற்று திரட்டப்பட்ட நிதியில் கடந்த 14 மாதங்களில் 35,000 கோடிக்கும் மேல் கடனை திருப்பிச் செலுத்தி இருக்கிறோம்’’ என்றார்.

 இவ்வளவு பணம் (35,000 கோடி) திரும்ப செலுத்தியும் கடன் சுமை இன்னும் தீர்ந்த பாடியில்லை. நான்கு மிகப்பெரிய நிறுவனங்களை கொண்ட இந்த குழுமம் சுமார் 93,900 கோடி கடனில் உள்ளது. இதில், அனில் அம்பானியில் பிரசித்தி பெற்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் நிறுவம் சேர்க்கப்படவில்லை. இந்த நிறுவனம் சமீபத்தில் திவாலானது குறிப்பிடத்தக்கது. சொத்துக்களை விற்று கடனை அடைப்பதால், அம்பானியின் மற்ற நிறுவனங்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால், இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை, பங்குச்சந்தையில் முன்னேற்றம் பெறும் என்று அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

Related Stories: