உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ ரெய்டு

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. இவர்கள் இருவரும் “லாயர்ஸ் கலெக்டிவ்” என்ற என்.ஜி.ஓ. அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த என்.ஜி.ஓ. அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. இந்த பணத்தை வழக்கறிஞர்கள் தம்பதிகள் இருவரும் முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

Advertising
Advertising

கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லி, மும்பையில் உள்ள வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வக்கீல் தம்பதிகள் இருவரும் தங்கள் மீதான வெளிநாட்டு பணம் மோசடி குற்றச்சாட்டை மறுத்து உள்ளனர்.

Related Stories: