காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்!

டெல்லி : மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.கே.சின்ஹாவை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத் தலைவராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராகவும் மசூத் அசார் பதவி வகித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் செய்யப்பட்டார்.

Advertising
Advertising

ஆனால் மசூத் அசார் பதவி வகித்து வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இதனால் மத்திய நீர்வள ஆணையம், காவிரி ஆணையத்துக்கு வேறு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில் தற்போது மத்தியநீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் என 2 அமைப்புக்கும் ஏ.கே.சின்ஹா தலைவராக  நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: