அசத்தும் ரெனோ டிரைபர் மினி கார்

ரெனோ நிறுவனம் புதிதாக டிரைபர் என்னும் எம்பிவி ரக காரை களம் இறக்கியுள்ளது. இது, 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 7 பேர் பயணிப்பதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது 4  மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்ட காராக இருந்தாலும், டிசைனும் காரின் பரிமாணங்களும் சிறப்பாகவே தெரிகின்றன. எனினும், 4 மீட்டர் மாடல் என்பதால் உருவத்தில் சற்றே சிறிய மாடலாகவே இருக்கிறது. ரெனோ கிவிட் காரின் நீளமான  மாடல் போலவே காட்சி தருகிறது.

ரெனோ நிறுவனத்தின் முத்தாய்ப்பான கிரில் அமைப்பு, அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் டெயில் லைட் ஆகியவை இதன் தோற்றத்திற்கு அழகு சேர்க்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட், பகல்நேர விளக்கு, 15 அங்குல அலாய் வீல், பாடி  கிளாடிங் சட்டங்கள், பின்புற பம்பருக்கான கிளாடிங் சட்டம் ஆகியவை காரின் தோற்றத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன.மூன்றாவது வரிசை, சிறியவர்களுக்கானது. இந்த 7 சீட்டர் மாடல் காரில், 84 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால் பூட் ரூம் கொள்திறனை 625 லிட்டர் என்ற அளவிற்கு  அதிகரித்துக்கொள்ள முடியும். இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
Advertising
Advertising

இந்த இன்ஜின் 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி வகை  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த காரில், 40 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 942 கிலோ வெற்று எடை கொண்ட இந்த காார் 182 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பது  மிக முக்கிய அம்சம் ஆகும்.இந்த காரில், மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. புதிய டேஷ்போர்டு அமைப்பு, பெரிய தொடுதிரையுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது,  ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய செயல்களை சப்போர்ட் செய்யும். இப்புதிய காரில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் போன்ற  அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளது. இப்புதிய கார், வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ₹5 லட்சம் முதல் ₹8 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: