சிறப்பம்சங்களுடன் மாருதி பிரெஸ்ஸா

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா எஸ்யூவி ரக கார் இருக்கிறது. இந்த கார் மலிவு விலையில் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஒவ்வொரு மாதமும் சுமார் 15 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. தற்போது, பிரெஸ்ஸா மாடலில் சில அப்டேட்டுகளை செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்தது. அந்தவகையில், புதிய 2019 பிரெஸ்ஸா மாடலில் கூடுதல் வசதியாக  சன்ரூப் மற்றும் பக்கவாட்டு பகுதியில் ஏர் போக் உள்ளிட்டவற்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த தரமான நடவடிக்கையால், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல், அதன் முந்தைய மாடலை காட்டிலும் பாதுகாப்பிலும்  சொகுசிலும் சற்று உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்த மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இந்த காரில் இடம்பெறவில்லை.வரும் ஜூலை 1-ம்தேதி முதல் அமலாக இருக்கிற ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளை அப்டேட் செய்து வருகிறது. இதற்காக, தனது அனைத்து கார்களிலும் வாகன ஓட்டி ஏர் பேக், சீட்  பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீட் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கூடுதலாக இணைத்து வருகிறது.

Advertising
Advertising

பக்கவாட்டு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சத்தில் இடம்பெறவில்லை. பாதுகாப்பு விதியை பொருத்தவரை, வாகன ஓட்டி மற்றும் முன்பக்க பயணி ஆகிய இருவர்களின் பாதுகாப்பிற்கான ஏர் பேக்குகளை மட்டுமே வலியுறுத்துகிறது.  இருப்பினும், மாருதி சுஸுகி அதன் பிரெஸ்ஸா காரில், ஹை எண்ட் வேரியண்டுகளில் காணப்படும் பக்கவாட்டு ஏர் பேக்குகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.அதேபோன்று, புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 காரணமாக, அதன் டீசல் வேரியண்ட் விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட உள்ளது. ஆகையால், இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.  மேலும், தற்போதைய மாற்றங்களுடன் புதிய கலர் மற்றும் காஸ்மெட்டிக் மாற்றத்தில் பிரெஸ்ஸா கார் அறிமுகமாக உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா கார் தற்போது, 1.3 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது, 4,000 ஆர்பிஎம்மில் 88.5 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்மில் 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்  கொண்டது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த கார் கிடைக்கிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: