கின்னஸ் சாதனை பெண் இயக்குநர் காலமானார்

ஹைதராபாத்: அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தெலுங்கு பட பெண் இயக்குநர் காலமானார். தெலுங்கில் 44 படங்களை இயக்கிய விஜயநிர்மலா(73) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். பழம்பெரும் நடிகையான விஜயநிர்மலா தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 200 திரைப்படங்களில் நடத்துள்ளார். விஜயநிர்மலாவும், சாவித்திரியும் மட்டுமே நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெண் இயக்குநர்கள் ஆவர். விஜயநிர்மலா 1950-ல் மச்சரேகை என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Advertising
Advertising

Related Stories: