கோடியக்கரையில் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலில் நீலநிறத்தில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது.  இதனை பார்த்த மீனவர்கள் நீந்தி சென்று அந்த பெட்டியை மீட்டனர். அதை திறந்து பார்த்தபோது ஐஸ் பெட்டி என தெரியவந்தது. பெட்டி மிதந்து வந்தவுடன் தங்கமாக இருக்கலாம் என மீனவர்கள் கருதினர். இலங்கையிலிருந்து அடிக்கடி தங்கம் கடத்தப்படுத்தப்படுவதும் கோடியக்கரையிலிருந்து, கஞ்சா கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

Advertising
Advertising

இந்நிலையில் மர்மபெட்டி மிதந்த உடன் இலங்கையிலிருந்து கடத்தி வந்த தங்கம் தவறி கடலில் விழுந்து மிதந்து இருக்கலாம் அல்லது கடற்படையினர் சுங்க துறையினர் தங்கம் கடத்தி வந்தபடகை விரட்டியபோது தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து இரண்டு மணி நேரம் போராடி பெட்டியை மீட்ட மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Related Stories: