4 ராமேஸ்வரம் மீனவர் படகுடன் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர் செல்வராஜ் படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.உடன் அப்பகுதியில் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்றனர். மீனவர்களுடன் படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் குறித்து கரையில் இருக்கும் மீனவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: