வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

சென்னை: நந்தனத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் சிவா, கடந்த 2014ம் ஆண்டு பைக்கை அருகில் உள்ள நித்தியானந்தம் (26) என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த தகராறில்  நித்தியானந்தம் அருள்தாஸை கத்தியால் குத்தி கொன்றார். இந்த  வழக்கு விசாரணை சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.அனில்குமார் முன்பு வந்தது. அரசு வக்கீல் கே.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார். வழக்கை  விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நித்யாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

× RELATED பல்லடுக்கு வாகனநிறுத்தத்துக்காக...