எஸ்ஆர்இஎஸ் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: மத்திய அரசின் 100 நாள் என்ற நாசகார திட்டத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் கடந்த 18ம் தேதி ரயில்வே அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற  வலியுறுத்தியும் பெரம்பூர் எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் நேற்று பெரம்பூர் லோகோ பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொது செயலாளர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். நிர்வாக செயலாளர் சூரியபிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதேபோல் ராயபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த அச்சகத்தை மூடுவதை கண்டித்து நிர்வாக செயலாளர் குமரவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

× RELATED பணி நிரந்தரம் செய்யக்கோரி வண்டலூர் பூங்காவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்