×

வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை வெற்றியை தொடர இந்தியா உறுதி

மான்செஸ்டர்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இதுவரை 5 லீக் ஆட்டங்களில் 4 வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் நடக்க இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா  3வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டியில் 2 வெற்றிகளை வசப்படுத்தினாலே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.காயம் காரணமாக தவான் விலகினாலும், லோகேஷ் ராகுல் அவரது இடத்தை சிறப்பாக நிரப்பியுள்ளார். 4வது வீரராக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கரும் திறமையை நிரூபித்து வருகிறார். அனைத்து வீரர்களுமே நல்ல பார்மில் உள்ள நிலையில், இந்திய அணி தனது 6வது லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டியில் 1 வெற்றி, 4 தோல்வி, 1 ரத்துடன் 3  புள்ளிகள் மட்டுமே பெற்று 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 போட்டியில் வென்றாலும், மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து அரை இறுதிக்கு முன்னேற நூலிழை வாய்ப்பு உள்ளது.

கேல், ஹோப், பிராத்வெய்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். காட்ரெல், ரோச் பந்துவீச்சும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். மழை பெய்ய வாய்ப்பு குறைவு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓல்டு  டிரபோர்டு மைதானத்தில் கடைசியாக நடந்த 3 போட்டியிலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக்  பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரிஷப் பன்ட்.வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், கிறிஸ் கேல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஆஷ்லி நர்ஸ், கெமார் ரோச், ஒஷேன் தாமஸ், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷேனான்  கேப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன், சுனில் அம்ப்ரிஸ்.

Tags : Multinationals , West Indies, India,success
× RELATED இன்று 5வது டெஸ்ட் தொடக்கம் தொடரை...