×

சில்லி பாயின்ட்...

* இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) விளையாடிய பிறகு ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக அதிரடி வீரர் கிறிஸ் கேல் (39 வயது)  அறிவித்துள்ளார்.
* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் போலந்தின் கமில் மஜ்ரஸாக்கிடம் தோற்று வெளியேறினார்.
* காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் விரைந்து குணமாகி வருகிறார். இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது’ என இங்கிலாந்து அணி தரப்பில் தகவல்  வெளியாகி உள்ளது.
* நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் பிரையன் லாரா நன்கு குணமடைந்ததை அடுத்து ஓட்டலுக்கு திரும்பியுள்ளார்.
* கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதலாவது கால் இறுதியில் பிரேசில் - பராகுவே அணிகள் மோதுகின்றன.

Tags : Chili, Point ...
× RELATED ஆம்பூர் அருகே பரிதாபம்: குளத்தில்...