வகுப்பு வாரியாக தனியார் பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு? ஒரு மாதத்தில் தகவல் தெரிவிக்க நிர்வாகங்களுக்கு கல்வித்துறை கெடு

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் ஒரு மாதத்துக்குள் கட்டண நிர்ணய குழுவில் விண்ணப்பித்து தங்கள் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த கடந்த 2008ம் ஆண்டு, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளாத பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் கட்டண விவரங்கள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று  உயர்நீதி மன்றக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் பேரில்  தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன், மெட்ரிக் மேனிலைப் பள்ளி, மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகள், தனியார் மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் கட்டண நிர்ணயக் குழுவின் இணைய தளமான www.tamilnadufeecommittee.com  என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்த பள்ளிகளின் படிட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தங்கள் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அங்கீகாரம் பெறப்பட்ட பிறகும், இதுவரை கட்டண நிர்ணயம் செய்யப்படாத பள்ளிகளின் பட்டியல்களை தயார் செய்ய வேண்டும்.  அந்த பள்ளிகள் ஒரு மாதத்துக்குள் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவுக்கு விண்ணப்பித்து  கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இது ெ தாடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

Related Stories: