×

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நாளை நடக்கிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை காலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (வெள்ளி) காலை 11.30 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK MLAs Meeting, EPS, OPS
× RELATED பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்