பலாத்காரம், வன்முறைகள் உபி.யில் தினமும் நடக்கிறது: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் வன்முறை, பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை தினசரி விவகாரமாகி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தி ெதாடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளிட்டுள்ள பதிவில், ‘உத்தரப் பிரதேசத்தில் குறிப்பாக தலித்,  பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. புலந்த்சாகரில் குடும்ப உறுப்பினரை திட்டியவரை  எதிர்த்த இரண்டு பெண்கள் கார் ஏற்றி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வன்முறை, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு தினசரி நிகழ்வாக மாறியுள்ளது. பாஜ தலைமையிலான காட்டாட்சியின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,’ என்று கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: