‘ரா’ உளவு பிரிவு தலைவராக சமந்த் கோயல் நியமனம்: பாலகோட் தாக்குதல் திட்டம் தீட்டியவர்

புதுடெல்லி: சமந்த் கோயல், ‘ரா’ உளவுப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உளவு அமைப்புகளான ‘ரா’ பிரிவு தலைவராக அனில் தஸ்மானாவும், ஐபி தலைவராக ராஜிவ் ஜெயினும் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்த இவர்களின் பதவிக்காலம், மக்களவை தேர்தல் காரணமாக 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு உளவு அமைப்புகளின் புதிய தலைவர்களை மத்திய அமைச்சரவை நியமனக்குழு தலைவரான பிரதமர் மோடி நேற்று நியமித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வெளிநாடுகளுக்கான ரா உளவுப்பிரிவு தலைவராக சமந்த் கோயலும், உள்நாட்டிற்கான உளவு பிரிவான ஐபி.,யின் தலைவராக அரவிந்த் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருவருமே 1984ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். அசாம் போலீஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய அரவிந்த் குமார், காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியை திறம்பட செய்தவர். கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானங்கள் குண்டுவீசி தகர்த்தன. இந்த தாக்குதலுக்கான  திட்டம் தீட்டியவர்களில் கோயல் மிகவும் முக்கியமானவர்.

‘மின்சார கொள்முதலில் ஊழல்’

ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மின்சாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:  சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில்  சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலை கண்டுபிடிப்பதற்காக சிபிஐ, சிபிசிஐடி, விஜிலென்ஸ் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.  அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் அரசு கஜானாவில் ₹2636 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யாருடைய  தலையீடு இருந்தாலும் அவர்களை விட்டு  வைக்கப்போவதில்லை. அதன்படி, உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வருக்கு தொடர்பு இருந்தாலும்  அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: