நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜ எம்எல்ஏ: நிலத்தை ஆளும் கட்சி கைப்பற்றசதி செய்வதாகவும் குற்றச்சாட்டு

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பாழடைந்த வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிகாரியை பாஜ எம்எல்ஏ கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினார்.   மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. நேற்று இந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கன்ஜி பகுதியில் பாழடைந்த வீடுகளை இடிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தூர் 3 தொகுதியின் பாஜ எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்க்கியா தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து பாஜ எம்எல்ஏ ஆகாசுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எம்எல்ஏ ஆதரவாளர் ஒருவர் திடீரென ஜேசிபி வாகனத்தின் சாவியை பறித்தார். இதுகுறித்து நகராட்சி அதிகாரி தனது உயர் அதிகாரிக்கு செல்போனில் தெரிவித்தார். இதனால் ஆ்த்திரம் அடைந்த எம்எல்ஏ ஆகாஷஅ கிரிக்கெட் மட்டை எடுத்து போனில் பேசிக்கொண்டிருந்த நகராட்சி அதிகாரியை சரமாரியாக தாக்கினார்.  இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இருதரப்பையும் போலீசார் விலக்கி விட்டனர். இந்நிலையில், அதிகாரியை தாக்கிய எம்எல்ஏ ஆகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடனடி ஜாமீன் அளிக்க கோர்ட் மறுத்துவிட்டது.

Related Stories: