‘முத்தலாக் வாக்கெடுப்பில் டிஆர்எஸ் பங்கேற்காது’

ஐதராபாத்: ‘‘முத்தலாக் மசோதா மீது மக்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி பங்கேற்காது,’’ என அக்கட்சி கூறியுள்ளது. தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவ்  தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சிக்கு மக்களவையில் 9 உறுப்பினர்களும்,  மாநிலங்களவையில் 6 உறுப்பினர்களும் உள்ளனர். சமீபத்தில், இந்த கட்சி `மத்திய  பாஜ கூட்டணிக்கு பிரச்னை அடிப்படையில் கடந்த முறையை போல் ஆதரவு அளிப்போம்’  என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி மக்களவையில் சர்ச்சைக்குரிய புதிய முத்தலாக் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.  முஸ்லிம் பெண்கள் (திருமண பாதுகாப்பு உரிமை) மசோதா -2019 என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா விரைவில் வாக்கெடுப்புக்கு வருகிறது.  இந்த மசோதாவுக்கு டிஆர்எஸ் கூட்டணி கட்சியான ஏஐஎம்ஐஎம்.மின் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.எனவே, இதன் வாக்கெடுப்பில் ஒதுங்கியிருக்க டிஆர்எஸ் முடிவு செய்துள்ளது.

Related Stories: