உத்தரகாண்டில் மசோதா நிறைவேற்றம் 2 குழந்தைக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பஞ்சாயத்து ராஜ் திருத்த மசோதா -2019 நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவில், ‘பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும். பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி ஆண் வேட்பாளர்கள் 8ம் வகுப்பு ேதர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தேர்தல்களில் போட்டியிட முடியும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களும், அதில் ஒருவர் புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்து 300 நாட்கள் கழித்து பின்னர் பிறந்திருந்தாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றவர்களாக மாட்டார்கள்” உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது.

Advertising
Advertising

Related Stories: