பரிவர்த்தனை தகவல்களை இந்தியாவில்தான் சேமிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

மும்பை:  கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை உட்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து வங்கி, பண பரிவர்த்தனை விவரங்களையும் இந்தியாவில்தான் சேமிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.    இதுதொடர்பான நெறிமுறைகளை கடந்த ஆண்டு ஏப்ரலில் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்நிலையில், பேமண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தரப்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு, அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.  இதில், இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்கள் மூலம் பரிவர்த்தனை நடைமுறைகள் இருக்கலாம். இதற்கு தடையில்லை. ஆனாலும், பரிவர்த்தனை முடிந்த பிறகு அதன் விவரங்கள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும். ஒரு வேளை பரிவர்த்தனை இந்தியாவுக்கு வெளியே நடந்திருந்தாலும், பரிவர்த்தனை முடிந்து அடுத்த 24 மணி நேரம் அல்லது ஒரு அலுவலக நாள் இவற்றில் எது குறைவோ அந்த கால அளவுக்குள் விவராக பரிவர்த்தனை விவரங்களை இந்திய சர்வர்களுக்கு மாற்றி விட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories: