மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: டிடிவி.தினகரன் அறிக்கை

சென்னை: மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று அமமுக பொதுச்ெசயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று உறுதியான உத்தரவை பிறப்பிக்காமல், மழை பெய்தால் தண்ணீர் விடுங்கள் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மழை பெய்தால் போதுமான தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு மேலாண்மை ஆணையம் எதற்கு? சட்ட ரீதியாக செயல்பட்டு உச்ச நீதிமன்றத்தின் வழியாக காவிரி நீரைப் பெறுவதற்கு பழனிசாமி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை வலிமையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: