58 ஆண்டுக்கு முன்பே காமராஜர் அடிக்கல் நாட்டிய திட்டம் ராசிமணலில் புதிய அணை கட்ட முனைப்பு காட்டுமா தமிழக அரசு?: மேகதாதுவால் வலுக்கும் கோரிக்கை

பென்னாகரம்: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், காமராஜர் ஆட்சியின் ேபாதே அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக எல்லையான ராசிமணலில் காவிரி நீரை சேமிக்கும் வகையில் அணை கட்ட வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் அரைநூற்றாண்டு கடந்த கோரிக்கையாக உள்ளது. 1961-62 வாக்கில் காமராஜர் முதல்வராக இருந்த போதே, இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  பணிகளும் துவங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் முடங்கியது.  அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் முதல்வராக இருந்தபாது, அப்போதைய எம்எல்ஏ பழ.நெடுமாறன் மூலம், அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம், சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்திற்குள் ஓடும் தண்ணீரை தேக்கி, பயன்படுத்த சட்டப்படி நமக்கு உரிமை உள்ளதாகவும், தமிழகம் ேதக்கி வரும் தண்ணீரை தடுத்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமையில்லை என்றும் அந்த தீர்மானத்தில் ெதளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதனை எம்ஜிஆரே, மத்திய அரசிடம் நேரடியாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சுமார் 60 ஆண்டுகளாகியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 2016 வாக்கில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கையிலெடுத்த கர்நாடக அரசு, தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ராசிமணலில் தமிழக அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற ேகாரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது.
Advertising
Advertising

இது குறித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மூத்த விவசாயிகள் கூறியதாவது: மேகதாதுவில் இருந்து ஒகேனக்கல் வரை,சுமார் 60 கிலோ மீட்டர் தூரம்,காவிரியின் இடது கரை பகுதியாகவும்,தமிழக எல்லையாகவும் இருக்கிறது. அதேபோல் இந்த பகுதிகள் முழுவதும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் வலதுகரை முழுவதும் கர்நாடகத்திற்கு சொந்தமாக உள்ளது. தமிழக எல்லைப்பகுதியில் ராசிமணல் அணை கட்டி முடிக்கப்பட்டால் சுமார் 50 முதல் அதிகபட்சம் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல்நோக்கி 42 கிலோ மீட்டர் மேகதாது வரையிலும்,வடக்கே 25 கிலோ மீட்டரில் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாக பிரித்து,தண்ணீர் ேசமிப்பு பகுதிகளாக மாற்றலாம்.  மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடியை தேக்கி வைக்கும் ேபாது,ஒகேனக்கல் அருவியை கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அதற்கு மேல்பகுதியில் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று அமைந்த பகுதியாக ராசிமணல் உள்ளது. இங்கு குறைந்த செலவில் விரைவாக அணையை கட்டி, தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

ராசிமணலில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடகத்திடம் நாம், நீரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவலம் நேராது. காவிரிப்படுகையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு,டெல்டாவின் குறுவை, சம்பா பயிர் சாகுபடிக்கும் உரிய நீராதாரம் கிடைக்கும். அதே போல் நாளுக்கு நாள்,அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீர்மட்டத்தையும் மேம்படுத்த முடியும். எனவே மத்திய அரசு,இதனை கருத்தில் ெகாண்டு ராசிமணலில் அணை கட்ட,தமிழகத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். அதே போல் தமிழக அரசும், இத்திட்டம் குறித்த விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியத்திடம் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு மூத்த விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: