×

நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகளுக்கு விலையின்றி விவசாயிகள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை சுற்றுவட்டார கிராமங்களில் வறட்சி காரணமாக காய்கறிகளை விளைவிப்போர் உரிய மகசூல் பெற முடியாமல் திண்டாடுகின்றனர். நெல்லை மார்க்கெட்டுகளில் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தை கோரமாக தாக்கி வரும் வறட்சி காரணமாக பல இடங்களில் இவ்வாண்டு கார் சாகுபடி இன்னமும் தொடங்க பெறவில்லை. நெல்லை அருகே தருவை, கோபாலசமுத்திரம் வயல்வெளிகளில் பல விவசாயிகள் நிலத்தை தரிசாக போட வேண்டாம் என கருதி, காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கிணற்றில் ேபார் மூலம் வெளியேறும் தண்ணீரை பயன்படுத்தி காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, புடலங்காய், பூசணிக்காய், தடியங்காய், உள்ளி உள்ளிட்ட காய்கறிகள் இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக குறிப்பிட்ட காய்கறிகளை விளைவிக்க மட்டுமே தண்ணீரை பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளனர். தொலைவில் உள்ள இடங்களுக்கு தண்ணீர் செல்லாததால், கத்தரிக்காய் வாடி பழுத்து நிறம் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

கோபாலசமுத்திரம் பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய்களுக்கு தற்போது விலையில்லை என்பது விவசாயிகளை வருத்தமடைய உள்ளது. வறட்சியான சூழலில், விவசாயிகள் விளைவிக்கும் கத்தரிக்காய்களை ஒரு கிலோ ரூ.8க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.30க்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து கோபாலசமுத்திரம் வியாபாரிகள் கூறுகையில், ‘‘வறட்சியான சூழலில் கத்தரிக்காய், பூசணிக்காய், உள்ளி போன்றவற்றை விளைவிப்பது சிரமமாக உள்ளது. சில வயல்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலமே தண்ணீரை கொண்டு செல்கிறோம். கிணற்றுநீர் வேறு இன்றோ, நாளையோ வற்றி போகும் சூழலில் உள்ளது. இந்நிலையில் காய்கறிகளுக்கு உரிய விலையை வியாபாரிகள் தருவதில்லை. ஒரு கிலோ மூடை(65 கிலோ) ரூ.500 என விலைபேசி வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர். ஆனால் கடைகளில் ஒரு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. எனவே எங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்’’ என்றனர்.

Tags : Paddy, Roundabout, Dindigam
× RELATED திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள...