×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற முன்னீர்பள்ளம்-ஆரைகுளம் சாலை

நெல்லை: நெல்லை அருகே உள்ளது முன்னீர்பள்ளம் கிராமம். இக்கிராமம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும் கிராம பஞ்சாயத்தாகும். இப்பகுதிக்குட்டது ஆரைகுளம். இங்கு திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து ஆரைகுளம் பகுதிக்கு செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல் முன்னீர்பள்ளம் பஸ்நிலையம் பகுதியில் இருந்து தெற்கு ேநாக்கி ஜெஜெ நகர் வழியாக ஆரைகுளம் செல்லும் வகையில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் செம்மண் நிரப்பி ஜல்லி கற்களை பரப்பி சாலை அமைக்கப்பட்டது. தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் தற்போது சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்களை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஜெஜெ நகர் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு வரவேண்டும் என்றால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற இச்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனத்தில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வரும் போது பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகற்களில் சிக்கி விபத்தில் சிக்கும் நிலையும் காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் மின் விளக்குகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் சாலையை சீரமைத்து மின்விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Transportation, munnirpallam, araikulam
× RELATED ஒமைக்ரானைத் தொடர்ந்து சைப்ரஸ்...