×

ரா மற்றும் ஐ.பி. ஆகிய உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

புதுடெல்லி: ரா மற்றும் ஐ.பி. ஆகிய உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான உளவு அமைப்பு ரா. இது வெளிநாட்டிலும் உளவாளிகளை கொண்ட பரந்து விரிந்த ஒரு அமைப்பாகும். இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின்போது தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக, ரா வழங்கிய இன்புட்டை வைத்து அந்த நாட்டு அரசுக்கு முன்பே இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அந்த அளவுக்கு சர்வதேச நாடுகளிலும் வலுவாக உளவுத் தகவல்களை இந்திய உளவு அமைப்பு சேகரித்து வருகிறது. இந்த ரா அமைப்பின் தலைவராக அனில் குமார் தஸ்தானா உள்ளார்.

அதேபோல், ஐ.பி. எனப்படும் உள்நாட்டு புலனாய்வு அமைப்பின் இயக்குனராக ராஜீவ் ஜெயின் ஆகியோர் பதவி வகித்து வருகிறார். இவர்கள் இருவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. பிரதமர் மோடி நியமனக் குழு தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த இரு உளவுத்துறை அமைப்புகளுக்கும் புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரா எனப்படும் மத்திய அரசின் வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிக்கும் பிரிவின் தலைவராக சமந்த் கோயலை பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ளார். அதேபோல இந்திய உளவு அமைப்பின் காஷ்மீர் பிரிவில் 2வது இடத்தில் இருந்த அரவிந்த் குமார், முதலிடத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதாவது உளவுத்துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.பி அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் நியமிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமந்த் கோயல் 1984ம் ஆண்டு பஞ்சாப் பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இந்திய விமானப்படை தாக்குதல் மற்றும் 2016ம் ஆண்டில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990களில் பஞ்சாப்பில் தலைவிரித்தாடிய பயங்கரவாத செயல்களை அடக்கியதில் சமன்த் கோயலுக்கும் பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உள்நாட்டு உளவுப்பிரிவாக கருதப்படும் புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ள அரவிந்த் குமார் 1984ம் ஆண்டு, அசாம்-மேகாலயா பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். பீகார் பிரிவு, உளவுத்துறை தலைவராக இருந்தவர். நக்ஸல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையால்வதில் இவர் நிபுணர் என்று கூறப்படுகிறது.


Tags : RAW, IP, chief, Prime Minister Modi, Samant Goyal, Arvind Kumar
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...