அணுக்கழிவுகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை: எம்.பி. தயாநிதிமாறன் கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்

டெல்லி : அணுமின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு நிலத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளால் அச்சுறுத்தல் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையின் கேள்வி நேரத்தின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன், அணுக்கழிவுகள் கூடங்குளம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதை சுட்டிக் காட்டினார்.

நாட்டு மக்களின் அச்சத்தினை போக்க அணுக்கழிவுகளை மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவனங்களில் சேமித்து வைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். தயாநிதி மாறன் கேள்விக்கு பதிலளித்த அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா சிங், அணுக்கழிவுகளை கையாள்வதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துவதாக கூறினார். ஆபத்து ஏற்படாத வகையில், சுமார் 100 அடி ஆழத்தில் அணுக்கழிவுகள் சேமிக்கப்படுவதாகவும் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்தார்.

Related Stories: