×

ஓசூர் - பெங்களூரு இடையே 6 வழித்தட அதிவிரைவுச் சாலை: விரைவில் தொடங்குகிறது பணிகள்

பெங்களூரு: ஓசூர் - பெங்களூரு இடையே, 6 வழித்தட அதிவிரைவுச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள், விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

STRR திட்டம் என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின் கீழ், ஓசூரிலிருந்து ஆனேக்கல், ராம்நகர், மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச் சாலை அமையவிருக்கிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948A என பெயரிடப்பட்டுள்ளது.

3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், 4 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையின் மொத்த நீளம் 180 கிலோ மீட்டர் ஆகும். கர்நாடக மாநிலத்தில் 135 கிலோ மீட்டர் அளவிற்கும், ஓசூர் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் அளவிற்கும், அமைகிறது. ஓசூர் பகுதியில் அமைய உள்ள 6 வழிச்சாலைக்காக, 400 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 6 வழி அதிவிரைவுச் சாலையில், வாகனங்கள் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பெங்களூரு மற்றும் ஓசூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் முற்றாக குறைய வாய்ப்புள்ளது. பெங்களூரு-ஓசூர் 6 வழிச் அதிவிரைவுச் சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்காக, ஓசூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.


Tags : Hosur, Bangalore, 6 lane highway
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...