முரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

சென்னை : சென்னையில் முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். சென்னையில் பெரியார் திடலில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க இருப்பதாக கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக கி. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற் உள்ள நீதி கட்சி, திராவிடர் கழகமாக மாறி 75 ஆண்டுகள் ஆனதன் பவளவிழாவில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்  இசைவு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் பொது வாழ்வில் 75 ஆண்டு காலத்திற்கும் மேலாக புகழ் பெற்று திகழ்ந்தவர் கருணாநிதி, திமுக தலைவராக 50 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த கருணாநிதி, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்தவர். திமுக தலைவராக திகழ்ந்த கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மறைந்தார்.

Related Stories: