பிரிட்டனின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

லண்டன்: இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவில், செல்வாக்கு செலுத்திய 100 பெண்கள் பட்டியலில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம்பிடித்துள்ளார். இவர் அந்நாட்டில் படித்ததை அடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகள் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக ஜூன் மாத இறுதியில் பிரிட்டன் - இந்தியா வாரம் கடைபிடிக்கப்படும். இதை முன்னிட்டு, இருநாடுகள் இடையே உறவு மேம்பட உதவியவர்கள் கெளரவிக்கப்படுவர்.

அந்த வகையில், பிரிட்டன் இந்தியா இடையே நல்லுறவை ஊக்குவிக்க செல்வாக்கு செலுத்திய 100 பெண்களின் பட்டியலை, அந்நாட்டு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் வெளியிட்டுள்ளார். அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் இடம் பிடித்துள்ளார். லண்டனில் பொருளாதாரம் பயின்று அங்கேயே பணிபுரிந்த நிர்மலா சீத்தாராமன், பிரிட்டனுக்கு மிகவும் பழக்கமானவர் என்று அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தவிர, இந்திய வம்சாவளி எம்.பி.க்களான பிரீத்தி படேல், பரோனெஸ் சாண்டி வெர்மா, திரைப்பட இயக்குனர் குரிந்தர் சாதா, அப்போலோ மருத்துவமனை மேலாண் இயக்குனர் சுனீதா ரெட்டி ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

Related Stories: