20 இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்க மத்திய அரசிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை

டெல்லி : சென்னைக்கு தடையின்றி தண்ணீர் விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தி உள்ளது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்சனையை எழுப்பினார். தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழகத்திற்கு ரயில்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்க வேண்டும் மத்திய அரசிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்தார்.

எதிர்காலத்தில் சென்னை மாநகரம் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிதிஆயோக் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதனை கருத்தில் கொண்டு மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க மத்திய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று டி.ஆர். வலியுறுத்தினார்.

Related Stories: