வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி : வடக்கு வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுவதாவது;

வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணம் ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதி சீற்றமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, ஜூலை ஒன்று முதல் 3 ஆம் தேதி வரை, வடகிழக்கு, கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல வட மேற்கு இந்தியாவில் அடுத்த 4 தினங்களுக்கு வெப்ப நிலை இரண்டு டிகிரியில் இருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: