உயரப்பறந்த தங்கத்தின் விலையில் இன்று இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ. 26, 088 க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து காணப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 3261 க்கும் சவரன் ரூ. 26, 088 க்கும் விற்பனை ஆகிறது.

தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 720 வரை அதிகரிப்பு

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், சவரன் 25,000க்கு குறையாமல் விற்பனையாகி வந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டு சவரன் 26,000ஐ தொட்டது. தொடர்ந்து, தங்கம் விலை சற்று குறைந்தது. குறைந்த வேகத்தில் மீண்டும் தங்கம் விலை தற்போது ஏற தொடங்கியது. அதாவது, கடந்த 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் 25,704, 21ம் தேதி 25,896, 22ம் தேதி 26,072க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 3,265க்கும், ஒரு சவரன் 26,120க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹43 அதிகரித்து ஒரு கிராம் 3.308க்கும், சவரனுக்கு 344 அதிகரித்து ஒரு சவரன் 26,464க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு நகை வாங்குவாரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விலை உயர்வு மாலை வரை நீடிக்கவில்லை. அதாவது, சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, மாலையில் கிராமுக்கு 38 அதிகரித்து ஒரு கிராம் 3,303க்கும், சவரனுக்கு 304 அதிகரித்து ஒரு சவரன் ₹26,424க்கும் விற்பனையானது.தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 720 வரை அதிகரித்துள்ளது.

இன்று கணிசமான சரிவு

இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமான சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 42 விலை குறைந்து ரூ. 3,261க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ. 26, 088 க்கும் விற்பனை ஆகிறது. உயரப்பறந்த தங்கத்தின் விலை இறங்குமுகம் காண தொடங்கி இருப்பது நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி அளித்துள்ளது. இருப்பினும் இது தற்காலிக நிலை தான் என்று கூறும் நகை வியாபாரிகள், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

22 கேரட் தங்கத்தின் விலை:

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.3,261 ஆகவும், சவரனுக்கு ரூ. 336 குறைந்து  ரூ.26,088க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை:

தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,566 ஆகவும், சவரனுக்கு ரூ.28,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் சில்லறையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ. 40.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: