3.20 கோடி பெண்கள் கணவருடன் வசித்தாலும் குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கின்றனர் : ஐ.நா. அறிக்கையில் தகவல்

வாஷிங்டன் : இந்தியாவில் குடும்பங்களை தலைமைத் தாங்குபவர்களில் 4.5% அளவிற்கு தனியாக வாழும் தாய்மார்களாக இருப்பதாக ஐ.நா.வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2019 -2020ம் ஆண்டிற்கான உலக அளவில் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஐ.நா. நேற்று வெளியிட்டது. அதில் இந்தியாவில் தனியாக வாழும் 1 கோடியே 30 லட்சம் தாய்மார்கள் குடும்பங்களை தலைமைத் தாங்குவதாக ஐ.நா. கூறி இருக்கிறது. இதில் 38% பெண்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 3 கோடியே 20 லட்சம் தாய்மார்கள் கணவருடன் வசித்தாலும் குடும்ப நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 46.7% பெண்கள் கணவர், குழந்தைகளுடன் வசிப்பதாகவும் 31% பெண்கள் தங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடனும் சேர்ந்து வசிப்பதாக ஐ.நா. கூறி இருக்கிறது. மீதமுள்ள 12.5%பெண்கள் ஒற்றைப் பெற்றோராக இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே பாலினத்தவர்கள் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடத்த மாத நிலவரப்படி, 42 நாடுகள் ஒரே பாலினத்தவர்கள் குடும்பங்களாக வாழ சம உரிமை கொடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 68 நாடுகள் ஒரே பாலினத்தவர்கள் தம்பதிகளாக வாழ்தலை குற்றச் செயலாக கருதுவதாகவும்  என்றும் அவற்றுள் 11 நாடுகள் ஒரே பாலின தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: