பரங்கிமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை..!

சென்னை: பரங்கிமலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காவலர்கள் பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பங்கிமலை பகுதியில் உள்ள ஜோதி திரையரங்கம் அருகே கேட்பாராற்று நீண்ட நாட்களாக ஒரு வாகனம் நின்று கொண்டிருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே எந்த ஒரு பொருளும் இல்லாத போன்று  அதன் தோற்றம் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென அங்கு வந்த இருவர் தங்களை வழக்கறிஞர் என்று கூறியும், இது தாங்கள் வாகனம் என்று கூறியும், சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் பேசியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் அந்த வாகனத்தை தீவிர சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைக்குள் திறந்து பார்த்த போது அடுக்கு அடுக்காக போதைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சுமார் கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்கள் இருப்பதாயும், கஞ்சா, விலை உயர்ந்த போதைப்பொருட்கள் போன்றும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களாக இந்த வாகனம் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வாகனத்தில் இருந்த ஆவணங்கள் கொண்டு போதைப்பொருளை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இந்த வாகனத்தின் உரிமையாளர் மனப்பாக்கத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனப்பாக்கத்தில் போலீசார் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>