தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது: அமைச்சர் வேலுமணி பேட்டி

தூத்துக்குடி: தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சியால் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் பருவ மழை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதனால் நடப்பாண்டில் தண்ணீர் பிரச்னை அதிகமாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் மற்ற இடங்களை விட கூடுதலாக இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடியில் பேட்டியளித்தார்.

Advertising
Advertising

அப்போது அவர் கூறுவதாவது; தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே குடிநீர் பிரச்னைக்கு காரணம். தமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது. ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி 3 வாரங்களில் முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

Related Stories: