×

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கோவை:  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 6 படிப்பு மற்றும் உயிர்தொழில் நுட்பவியல் பிரிவில் 4 தொழில்நுட்ப படிப்பு என மொத்தம் 10 பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.  இந்த படிப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டில் மொத்தம் 51,791 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதனை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் வெளியிடுகிறார். இதனை பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்.



Tags : Tamil Nadu ,Agricultural ,University, Rankings
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்