×

முற்றுகையிட காத்திருந்த முன்னாள் மாணவர்கள் லேப்டாப் தராமல் எஸ்கேப் ஆன அதிமுக எம்எல்ஏ: உசிலம்பட்டியில் சாலை மறியல்

பேரையூர்: தமிழகம் முழுவதும் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. லேப்டாப் வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாததால், எம்எல்ஏவை முற்றுகையிடுவதற்காக, முன்னாள் மாணவர்கள் காத்திருந்தனர். இதையறிந்த எம்எல்ஏ நீதிபதி, எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் லேப்டாப் வழங்கி சென்று விட்டார்.   

மாணவர்கள் மறியல் : உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி  மற்றும் அரசு உதவிபெறும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று  லேப்டாப் வழங்கப்பட்டது. இதையறிந்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.  அங்கிருந்த ஆசிரியர்கள், ‘‘2017-18ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு தற்போது லேப்டாப்  வரவில்லை. அரசு எப்போது கொடுக்கிறதோ அப்போதுதான் தர  முடியும்’’ என தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள்  உசிலம்பட்டி ஐந்துகல்ராந்தல் தேவர்சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

Tags : Alumni, Amateur, MLA ,laptop, Usilampatti
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...