பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி

கர்வா: சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்திற்கு நேற்று அதிகாலை  பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அப்போது அனுராஜ் காதி என்ற பகுதியில் சென்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த  பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  பேருந்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: