குர்மீத்துக்கு பரோல்

சண்டிகர்: அரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். இவர் தனது சிஷ்யைகள் 2 பேரை பலாத்காரம் செய்த புகாரில் 20 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளார். தற்போது அவர் ரோதக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலம் நீண்டநாட்களாக பயிரிடப்படாமல் இருப்பதாகவும், அதில் விவசாயம் செய்வதற்கு தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் கேட்டு குர்மீத் ராம் ரஹீம் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, குர்மீத்தின் நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாக கூறிய சிறை நிர்வாகம் அவருக்கு 42 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: