இரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை

புதுடெல்லி: ஒரு மாநிலத்தில் அலுவலகம்; இன்னொரு மாநிலத்தில் வர்த்தகம் என்று நடத்தும் நிறுவனங்களுக்கு இரண்டுக்கும் சேர்த்து தான் ஜிஎஸ்டி வரி போடப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக  அரசு விரைவில்  முடிவு எடுக்க உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் ஒப்புதல் பெற்று இது தொடர்பாக சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மனித வளம்,  ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு போன்ற அலுவலகத்திற்குள்ளான பணிகள் ஜிஎஸ்டி விதிகளின் படி தான் கணக்கிடப்படும். இந்த அலுவலகம் இன்னொரு மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் அங்கம் என்றாலும், இதன் சேவைகளுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று கவுன்சில் நினைக்கிறது.

அலுவலக சேவைக்கு தனியாக இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும். இதன்படி, நிறுவனங்கள் உள்ளிருப்பு வரி வரவு சலுகையை பெறலாம். ஆனால், விதிவிலக்கு அளிக்கப்பட்ட பிரிவில், எரிசக்தி, சுகாதாரம், மதுபானம், கல்வி போன்றவற்றிக்கு வரி சலுகை அளிக்கப்படுள்ளதா என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை.தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு இடையே எப்படி உள்ளிருப்பு வரி வரவை பிரித்துக் கொடுப்போகிறார்கள் என்பது பற்றிய கேள்விக்கும் விடை தெரியவில்லை. அதேபோல், வரி விதிப்பு எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது பற்றியும் விளக்கப்படவில்லை.   இந்த விஷயத்தில் விரிவாக பேசி, முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனால், இதுபற்றி கவுன்சில் அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

Related Stories: