×

சில்லி பாயின்ட்...

* கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டங்களில் பிரேசில் - பராகுமே (ஜூன் 27), அர்ஜென்டினா - வெனிசுலா (ஜூன் 28), கொலம்பியா - சிலி (ஜூன் 28), உருகுவே - பெரு (ஜூன் 29) அணிகள் மோதுகின்றன.
* ‘துப்பாக்கிசுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக எடுக்க முடியாது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகளுடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்’ என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறியுள்ளார்.
* ஹிரோஷிமாவில் நடந்த எப்.ஐ.எச் சீரீஸ் பைனல்ஸ் மகளிர் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் ஜப்பான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி வீராங்கனைகள், டெல்லியில் நேற்று விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : Chili Point ...
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...