ஸ்பெயினை வீழ்த்தியது அமெரிக்கா: ஸ்வீடன் முன்னேற்றம்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட அமெரிக்கா தகுதி பெற்றது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் அணியுடன் மோதிய அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் ராபினோ 7வது மற்றும் 75வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அபாரமாக கோல் அடித்தார். ஸ்பெயின் வீராங்கனை ஹெர்மோசோ 9வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.

உலக கோப்பையில் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் தோற்காமல் இருந்து வரும் அமெரிக்க அணி, கால் இறுதியில் 28ம் தேதி பிரான்ஸ் அணியுடன் மோத உள்ளது. மற்றொரு ரவுண்ட் ஆப் 16 போட்டியில் கனடா அணியுடன் மோதிய ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் பிளாக்ஸ்டெனியஸ் 55வது நிமிடத்தில் கோல் போட்டார். 29ம் தேதி நடைபெறும் கால் இறுதியில் ஜெர்மனி - ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன.

Related Stories: